MCQ Model - 1 LOGIC

1comments


உயர்தரம் Logic and Scientific Method பாடத்தில் அதிக பல்தேர்வு வினாக்கள் MCQ பயிற்சி உள்ளது.

இங்கே ஒவ்வொரு பகுதியிலும் 50 கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் 120 நிமிடத்தில் இப்பரீட்சையை பூர்த்திசெய்தல் வேண்டும். நீங்கள் இந்த பரீட்சை வினாக்கள் அனைத்திற்கும் விடை அளித்துள்ளீர்களா, என்பதை உறுதி செய்த பின்னர், "விடைகளும் புள்ளிகளும்" என்ற பொத்தானை அழுத்தியதும் உங்களது மதிப்பெண்களையும் சரியான விடைகளையும் பார்வையிட முடியும்.

www.thanalogic.com
தனாலொஜிக் டாட் கொம்
  1. உளவியல் என்ற துறைக்கு மிகவும் பொருந்தக்கூடிய விளக்கமாக பின்வருவனவற்றில் எதனைக் கருதலாம் ?
  2. அனுபவத்தை சார்ந்தது அனுபவத்தை சாராதது பரிசோதனை மேற்கொள்ளக்கூடியது எதிர்வு கூறலை தரவல்லது பிரயோக, சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானப் பண்புகளைக் கொண்டது
  3. தாய் - சேய் என்பது பதங்களின் எவ்வகையான பதமாகும்
  4. மறுதலைப் பதம் எதிர்மறைப் பதம் தனிப்பதம் சார்புப் பதம் குறைப்பதம்
  5. எடுப்பு முரண்பாடு அனுமானத்தின் படி இரண்டும் உண்மையாக அமையக்கூடிய தொடர்பு யாது ?
  6. மறுதலை முரண்பாடு உபமறுதலை முரண்பாடு எதிர் மறை முரண்பாடு வழிப்பேற்று முரண்பாடு கீழ்த்திசை வழிப்பேறு
  7. பின்வருவனவற்றில் எது சமமான சமன்பாடுகளாக காணப்படுகின்றன ?
  8. (~PVQ) , (~P →Q) (P^Q) , (~PV ~Q) (P → Q) , (~Q → ~P) (P→~Q) , (PV~Q) (PVQ), ~(PVQ)
  9. ஜோன் டால்ரனின் அணு தொடர்பான கருத்துக்களில் பொருத்தமற்றதை தெரிவு செய்க
  10. சடப்பொருட்கள் யாவும் அணுக்களால் ஆனவை ஒரே மூலகத்தின் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிருக்கும் சடப்பொருட்கள் மேலும் பிரிக்க முடியாத நுண்ணிய துணிக்கைகளால் ஆனது அணுவை மேலும் பிரிக்க முடியும் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
  11. அவன் இன்றோ அல்லது நாளையோ வீட்டுக்குச் செல்வான் என்ற மெல்லுறழ்வு எடுப்பை அவற்றின் பொருள் மாறாது நிபந்தனை எடுப்பாக கூறினால் எது சரியாகும் ?
  12. அவன் இன்று வீடு வருவான் எனின் நாளை வீடு வருவான் அவன் இன்று வீடு வரவில்லை எனின் நாளை வீடு வரவில்லை அவன் இன்று வீடு வரவில்லை எனின் நாளை வீடு வருவான் அவன் முஸ்தபா இன்று வீடு வருவான் எனின் நாளை வீடு வருவான் என்பது பொய் அவன் இன்று வீடு வரவில்லை எனின் நாளை வீடு வரவில்லை என்பது பொய்
  13. P உண்மை எனின் பின்வரும் வாதங்களில் எது எப்போதும் பொய்யாகும்
  14. (~PVQ)  [(P→ Q) v R] [( ~P^ ~Q) ^ R] [P→(Q→ ~R)] (P→~Q)
  15. வென்வரை படம் ஒன்றில் ஒன்றினது வகுப்பும் அதனுடைய எதிர்மறையும் சேர்ந்து உருவாகும் வாக்கியம் எவ்வாறு கருதப்படும்
  16. உபவகுப்பு பூரணவகுப்பு இடைவெட்டு வகுப்பு உரையாடல் உலகு நிரப்பி வகுப்பு
  17. பின்வரும் நிகழ்தகவுகளின் விளக்கங்களில் மிகச் சரியானதை தெரிவு செய்து காட்டுக
  18. ஆறுபக்கங்களை கொண்ட தாயக்கட்டையை மேலே போடுகையில் ஒற்றைப்பட எண் எறிவதற்கான நிகழ்தகவு 1/6 ஆகும் நிகழ்வொன்றின் நிகழ்வு 60% எனின் அந்நிகழ்வு நிகழாமைக்கான நிகழ்தகவு 4/10 ஆகும் மஞ்சட்காய்ச்சலினால் மரணமடைந்தோரில் நிகழ்தகவுப் புள்ளி விபரம் 25% ஆயின் A, B, C மற்றும் D ஆகிய நோயாளிகளில் A நோயினால் மரணிப்பார் ஆறு இலக்கங்கள் கொண்ட தாயக்கட்டை ஒன்று இருமுறை உருட்டும் போது மொத்தப் புள்ளி 7 வருவதற்கான நிகழ்தகவு 2/6 ஆகும் 52 சீட்டுக்களைக் கொண்ட சீட்டுப்பக்கற் ஒன்றில் இருந்து ஒரு சீட்டை எடுக்கும் போது ராஜா வருவதற்கான நிகழ்தகவு 2/13 ஆகும்
  19. 1, 2, 3, 4, 5 என்ற புள்ளித் தொகுதியின் இடை, இடை விலகல் முறையே யாது?
  20. 5, 3 3, 1, 2 1, 5 3, 2 5, 2






மட்டு நகரின் பிரபல அளவையியல் ஆசான் தனஞ்ஜெயன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பல்தேர்வு வினாக்கள் - புதிய பாடத்திட்டத்திற்கானது.

அதிகம் அதிகமாய் பயிற்சிகள் செய்து அதிகம் அதிகமாய் புள்ளிகள் பெற்றிடுங்கள்.

www.thanalogic.com
தனாலொஜிக் டாட் கொம்
Share this article :

+ comments + 1 comments

29 December 2012 at 20:32

ore nerathil unnmaiyahavum poiyyahavum ammaiyum thodarbu valippera??????if so cn u explain the reason?

Post a Comment

உங்கள் சந்தேகங்களை இங்கு Comment ஆக இடுங்கள் விடை கிடைக்கும் - By : N.தனஞ்ஜெயன்



sakaram.com


 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Logic - அளவையியல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger