போலிகள் பயிற்சிகள்

0 comments


1. அரசியல் யாப்பு பேச்சு சுதந்திரத்தை அடிப்படை அரசியல் உரிமை என உறுதிப் படுத்துகின்றது. ஆகவே உங்களது நன்பர் திரைப்பட மாளிகையினுள் 'குண்டு குண்டு' என்று கூச்சலிட்டதால் அது அங்கிருந்த பலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் அவன் உரிமையின் படியே செயற்பட்டுள்ளான்.

2. ஒருவரின் தாகத்தை தண்ணீர் தீர்த்து வைக்கின்றது. தண்ணீர் ஐதரசன், ஒட்சிசன் என்பனவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயின் ஐதரசன் ஒட்சிசன் என்பனவற்றால் ஒருவரின் தாகம் தீர்த்து வைக்கப்படுகிறது.

3. ஒரு நேர் கோடானது ஏராளமான புள்ளிகளினால் ஆக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு புள்ளிக்கேனும் நீளம் இல்லை ஆகவே நேர்கோட்டிற்கு நீளம் இல்லை.

4. விஞ்ஞானிகள் அதியுயர் அறிவை உடையவர்கள் ஏனென்றால் அவர்கள் அதியுயர் அறிவை உடையவர்கள் அல்லவாயின் அவர்கள் விஞ்ஞானிகள் அல்ல என்பதாலாகும்.

5. கடந்த இரண்டு மாதங்களாக நடந்த போட்டிகளில் சிவப்புத் தொப்பி அணிந்து கரகோஷம் செய்த குழுவினர் தோல்வியடைந்தனர். ஆகையால் எதிர்காலத்தில் தோல்வியடையாதிரக்க வேண்டுமாயின் சிவப்புத் தொப்பி அணிந்து கொண்டு கரகோஷம் செய்வதிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்

6. விட்டமின் உட்கொள்வதனால் மனிதனின் தேகாரோக்கியம் முன்னெற்றமடையும் என்று ஒருவராவது ஒரு நாளிலாவது நிரூபிக்கவில்லலையாதலால் விட்டமின் உட்கொள்வது வீண் பணவிரயம் மட்டுமே.

7. எல்லாப் பாம்புகளும் இறப்பவை என்பதால் என்றாவது ஒருநாள் இப்பூமியில் பாம்புகள் இல்லாமல் போகும்.

8. மேலே செல்லும் எல்லாப் பொருட்களும் கீளே வரும். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எரிபொருள் விலை மேலே சென்றிருப்பதனால் சந்தேகமின்றி அவை கீழே வரும்.

9. அறுவைச்சிகிச்சை வைத்தியர்கள் நோயாளர்களைச் சுகப்படுத்துவதில் திறமைசாலிகள். அப்படியல்லவாயின் அவர்கள் அறுவைச்சிகிச்சை வைத்தியர்கள் அல்ல.

10. நேர்முகப் பரீட்சைக்காக மாலா விட்டை விட்டு வெளியேறிய போது தலையில் வெற்றுக் குடத்தைச் சுமந்து வரும் ஒருத்தியைச் சந்தித்ததோடு அவள் நேர்முகப் பரீட்சையிலும் தோல்வியடைந்தாள். அவள் தலையில் வெற்றுக் குடத்தைச் சுமந்து வரும் ஒருத்தியைச் சந்தி;க்காதிருந்தால் அவள் நேர்முகப் பரீட்சையில் வெற்றி பெற இடமிருந்திருக்கும்.

11. தான் மேலதிகமாக விடுமுறை எடுத்திருந்தாலும் கடமையில் சிறுசிறு கவனயீனங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது தனக்குக் கிடைக்கவிருக்கும் பதவி உயர்வு காலதாமதமின்றி பெற்றுத் தரப்படும் என்று தான் நம்புவதாகத் தனது நிறுவனத்தின் தலைவரிடம் தெரிவித்த ராஜா நிறுவனத் தலைவரினால் செய்யப்பட்ட தான் மாத்திரம் அறிந்துள்ள பல்வேறு ஊழல்களை இதுவரைக்கும் எவருக்கும் தெரியாமல் இருந்ததை தெரியப்படுத்தமாட்டான் என்று எதிர்பார்ப்பும் இருக்கலாம் அல்லவா என்று கூறினான்.

12. தந்தையை இழந்த குழந்தைகள் பசியினால் கதறும்போது தொழில் எதுவுமில்லாததால் அவர்களின் பசியைத் தணிப்பதற்காக கொள்ளையடிப்பதில் சம்பந்தப்பட்டேனேயன்றி உண்மையில் நான் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்பதோடு நான் தண்டிக்கப்பட வேண்டியவனும் அல்ல.

13. நாளை மாலை எனது வீட்டில் நடக்கவிருக்கும் விருந்துபசாரத்திற்கு தவறாது வருவதாக நீ வாக்களித்தாலும், வாக்களித்தால் அதை நிறைவேற்றுவது மனித சுபாவம் என்பதனாலும் உனது தாயின் மரணத்தினால் வரமுடியவில்லை எனக்கூறுவது சரியல்ல.

14. நீர் ஒரு பெண் ஆதலால் பெண்கள் ஆண்களைவிட குறைவான புத்தியுள்ளவர்கள் என்பதை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

15. அந்த கிரிக்கெட் அணி அடுத்தடுத்து பத்து போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே அந்த கிரிக்கெட் அணியின் தலைவர் திறமையற்றவர்

16. நான் பதவி உயர்வு பெற உண்மையாகவே தகுதி பெற்றுள்ளேன். ஏனெனில் பாடசாலை செல்லும் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் கடுமையாக நோயுற்றுறிருக்கும் மனைவிக்கு கணவன் என்பதினாலும் ஆகும்

17. யுஇ டீஇ ஊஇ னுஇ  ஆகிய மாணவர் நால்வரும் கிளர்ச்சியாளர்களாக இருப்பதனால் எல்லா பல்கலைக்கழக மாணவர்களும் கிளர்ச்சியாளர்களாவர்.

18. ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற நான்கு பேரின் கொலை பற்றிய தகவல்கள் கண்டியில் வெளியாகியிருப்பதுடன் சந்தேகத்திற்கிடமான மூவருமே கறுப்பு நிறமானவர்களாயுள்ளனர். சென்ற வாரம் காலியில் நடந்துள்ள இரட்டைக் கொலைகளைச் செய்தவர்களும் கறுப்பு நிறமானவர்களேயாவர். ஆகவே கறுப்பு நிறமானவர்களே குற்றச் செயல்களை செய்வார்கள் என்பது நிட்சயம்.

19. நாமனைவரும் எல்லேராலும் நன்கறியப்பட்டவர்களாக இருப்பதனால் நாமனைவரும் பிரமுகர்களாக முடியாது.

20. திருமணமான அன்றைய தினமே அப்புதிய ஜோடிகள் வாகன விபத்தில் மரணமடைந்தனர். அன்று அவர்களது திருமணம் நடைபெறாதிருப்பின் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்திருப்பர்.

21. இந்த நூலகத்தில் உள்ள எல்லா நூல்களும் நாவல்களாக இருப்பதனால் நாவல்களைத் தவிர வேறு எந்த நூல்களும் இந்த நூல் நிலையத்தில் இல்லை

22. அரசாங்கம் என்ற கப்பல் கடலில் கப்பலைப் போன்றது. எந்த ஒரு மாலுமியும் கப்பல் தலைவனின் கட்டளையை மீற இடமளிக்கப்பட மாட்டாது. அதேபோல ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு மாற்றமாக கருத்து தெரிவிக்க எந்த பிரஜைக்கும் எகவ்விதமான சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது.

23. கட்சித்தலைவரின் தொலைக்காட்சிப் பேச்சு முடிந்த சில வினாடிகளின் பின்னர் மலை நாட்டின் பல பகுதிகளிலும் மண்சரிவுகள் நிகழ்ந்தன. ஆகவே மலைநாட்;டில் வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கை என்னவெனில் மீண்டும் ஒருதடவை கட்சித்தலைவர் தொலைக்காட்சியில் பேச விடாது தடுப்பதாகும்.

24. இந்த நாட்டின் சுகாதார ப்pரச்சினைகளுக்கு புகைபிடித்தலே பிரதான காரணமாக இருக்கின்றது என வைத்தியர் பெரேரா ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். உங்களுக்கு உயிரின் மேல் அணுவளவேனும் அக்கறை இருக்குமானால் புகைபிடித்தலைக் கைவிடுங்கள் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார் ஆனால் வைத்தியர் பெரேராவின் போதனைகளை துரதிர்ஷ்டமாக ஒதுக்கிவிட நேர்ந்துள்ளது. ஏனெனில் நேற்றும், வைத்தியர் பெரேரா புகைபிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்

25. உமது நிதிநிலையைக் கவனத்தில் கொண்டால் உம்மை அமைப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறத்தோன்றுகின்றது. உடைந்து நொருங்கிப்போன யன்னல்  கதவுகள் வீட்டுத்தளபாடம் முதலியன என்பவற்றுடன் நொருங்கிப்போன வாகனம் முதலியவற்றின் நஷ்டத்தையும் கவனத்திற் கொண்டு பார்த்தால் எமது அமைப்பில் நிர் அங்கத்தவராய்ச் சேராமல் இருக்கமுடியாது என்பதை உம்மால் நன்றாக உணர முடியும்.

26. க.பொ.த சாதாரண தரத் தேர்வு நாடிகள் அறிவுள்ளவர்கள் ஆகவே தேர்வு நாடியான சரத்;  அறிவுள்ளவனாவான்.

27. அரசியல் யாப்பின் படி பேசும் உரிமை எவருக்கும்; உண்டு என்பது உறுதிப்படுத்தபட்டள்ளது. ஆனதால் உனது நண்பன் பஸ் வண்டியினுள் குண்டு வைக்கப்ட்டிருப்பதாக சத்தமிட்;டு மனிதாகளை தவராக வழிநடத்தியள்ளதனால் குழப்பமடைந்த பிரயாணிகள் பஸ்ஸில் இருந்து பாய்ந்து காயங்களை  ஏற்படத்திகொண்டாலும் உமது நண்பன் அவர் பொற்றுள்ள உரிமைக்க ஏற்ற விதத்தில் தான் செயற்பட்டுள்ளார்

28. தற்போது தொண்ணூறு வீதமான இளைஞர்களும் யுவதிகளும் எமது வர்த்தக நிறுவனத்தின் கையடக்கத் தொலைபேசிகளையே பயன்படுத்திவருவதனால் உங்களுக்கும் அந்தக் கையடக்கத் தொலைபேசியே தேவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

29. விளையாட்டுப் போட்டி ஆரம்பிக்கப்படாதிருந்தால் மழை பெய்திருக்க மாட்டாது. ஏனெனில் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானதின் பின்னர்தான் நீடித்திருந்த வரட்சிக்காலம் முடிவுற்று மழைபெய்யத் தொடங்கியது.

30. நான் நிமலைச் சந்திக்கச் சென்ற ஒவ்வொரு தடவையும் நிமல் அவனது வீட்டில் இல்லாதிருந்ததால் ஒருபோதாவது அவன் வீட்டில் இருந்தது கிடையாது என்று முடிவு செய்கிறேன்.

31. உங்களிடம் சிறைக் கைதிகளாக உள்ள எமது மக்களை விடுதலை செய்வீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. ஊங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருக்கும் மிகப் பிரசித்திவாய்ந்த நகரத்தை எமது குண்டுதாரிகள் தாக்கி அழிப்பரதக் காண்பதற்கு நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீர்கள் என்பது எனக்கு அதைவிடவும் ஐயமற்றதாகும்.

32. பேச்சு சுதந்திரம் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமையாகும்  என்பதால் கடந்த மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு சத்தியபாலனது பேச்சு காரணமாக இருப்பினும் அவரைக் கைது செய்யலாகாது

33. 'அமத்தியப்ப' என்பவன் கள்ளோ அல்லது சாராயமோ அல்லது மதுசாரம் கலந்த குடிவகைகளையோ எவரும் எச்சந்தர்ப்பத்திலும் குடித்ததை காணவில்லை  என்பதால் அவன் குடிகாரனல்லப் போலும

34. வெற்றிலை சப்புதல் வாய்ப்புற்று நோய்க்குக் காரணமாகின்றது என  இரசாயனவியலாளர் கூறுகிள்றார். ஆகவே நாம் இதை சரியானதென ஏற்றுக்கொள்ள வேண்டும்

35. கடந்த ஐந்து வருட காலத்தினுள் அவர் ஒருபோதும் இந்தியா செல்லவில்லை. ஆகவே அவர் ஒரு போதும் இந்தியா செல்லவில்லை

36. அந்த பஸ் வண்டி அதி விரைவாகச் செல்கிறது. ஏனெனில் அது கடுகதி பஸ்.

37. யாராவது ஒருவர் ஒரு நபர் உடலை கத்தியால் வெட்டினால் அவர் கைது செய்யப்படுவர். அறுவை வைத்தியர் அறுவைச் சிகிச்சையின் போது இதனைத்தான் செய்கின்றார். ஆகவே அறுவை வைத்தியர் கைது செய்யப்பட வேண்டும்

38. ஒழுக்கத்தைப்பற்றி அப்பிரசாரகர் கூறும் கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றத்தைப் புரிந்துள்ளவராவர்

39. யுயை விட டீ பெரியது. டீ யை விட யு சிறியதாக இருப்பதுதான் இதன் காரணமாகும்

40. இந்தப் புத்தகம் பாரமானது. அதனால் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் பாரமானது ஆகும்

41. எனது கருத்தை நீர் ஏற்கவேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். உமது குடும்பத்தினருக்கும் எமக்குமிடையிலிருக்கும் உறவை நீர் அறிவீர். மேலும் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் தவறான நடவடிக்கைகளை உமது  குடும்பத்தினரிடம் கூற மாட்டேன் என என்னிடம் நீர் எதிர்பார்ப்பீர்தானே

42. பல்கலைக்கழகக் கல்வி பற்றிக் கடுமையான விமர்சனம் செய்யப்படுகிறது. நாட்டிற்கு அவசியமான புத்திஜீவிகளைப் பல்கலைக்கழகம் உருவாக்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே பல்கலைக்கழகங்களை மூடிவிடுவதுதான் இதற்கானதெளிவான தீர்வாகும்

43. நண்பரே! பேராசிரியர் ஓ இனால் வழங்கப்பட்ட புதிய நாவலைத் தயவு செய்து முடிந்தவரை விரைவில் வாசியுங்கள். ஏற்கனவே பத்து லட்சம் பிரதிகள் விற்று முடிந்துவிட்டன. இன்று அனேகமாக ஒவ்வொருவரும் இதைப்பற்றித்தான் பேசுகின்றனர்

44. மெய்யியலாளர்கள் நுண்ணறிவுள்ளவர்கள். அவர்கள் அவ்வாறில்லாவிட்டால் அவர்கள் மெய்யியலாளர்கள் அல்லர்

45. சரத் இன்று மாலை உனது சைக்கிளை எனக்குத் தருவாய் என்று எனக்குத் தெரியும். இன்று நீ பாடசாலைக்குச் செல்லவில்லை என்பதை உன் தாய் அறிவதை நிச்சயம் நீ விரும்பமாட்டாய்.

46. ஒரு விற்பனையாளன் ஒரு மனிதனாவான். ஆகவே நல்லதொரு விற்பனையாளன் நல்லதொரு மனிதன் ஆவான்.

47. உலக அழகுராணி வயிற்றுநோவை நீங்குவதற்கு அரலு மாத்திரைகளை எடுக்கின்றாள். உலக அழகுராணிக்குப் பல வகையான வயிற்று நோவுகள் இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமாற்ற விடயம். ஆகவே அரலு மாத்திரைகள் தான் வயிற்று நோவிற்குச் சிறந்த மருந்து

48. அதிபர் அவர்களே! பட்டினி கிடக்கும் பெற்றோருக்கும் வலது குறைந்த மனைவிக்கும்  ஏழு பிள்ளைகளுக்கும் உணவளிக்க வேண்டியிருப்பதனால் சம்பள உயர்வுக்கு நான் தகுதியானவன்

49. பரோபகார மாதிரிப் பாடசாலை அதன் ஆக்க இலக்கியப் படைப்பிற்குப் பெயர் போனது. ஆகவே வித்யா சக்கரவர்த்தியும் ஒரு ஆக்க இலக்கியவாதி

50. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை கிரிக்கட் அணி மிகச் சிறப்பாக ஆடியது. ஆகவே இலங்கை அணித்தலைவரும், உபதலைவரும், விக்கற் காப்பாளரும் மிகச்சிறப்பாக ஆடினர்.

Share this article :

Post a Comment

உங்கள் சந்தேகங்களை இங்கு Comment ஆக இடுங்கள் விடை கிடைக்கும் - By : N.தனஞ்ஜெயன்



sakaram.com


 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Logic - அளவையியல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger